செய்திகள்

மொஹமட் சித்திக்கிற்கு சொந்தமான 2 கிலோகிராம் தங்கம் வங்கியிலிருந்து கண்டுபிடிப்பு

போதைப் பொருள் வர்த்தகம் தொடர்பாக கைது செய்யப்பட்டுள்ள   வெலே    சுதா எனப்படுபவரின்  சகாவான மொஹமட் சித்திக்கிற்கு சொந்தமான சுமார் 2 கிலோகிராம் தங்கம் வங்கியொன்றில் உள்ளமை கண்டறியப்பட்டுள்ளது.
வங்கியிலுள்ள இந்த நகையை முடக்குவதற்கான நடவடிக்கைகள் தற்போது முன்னெடுக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் உதவிப் பொலிஸ் அத்தியட்சகர் ருவன் குணசேகர தெரிவித்துள்ளார்.
மொஹமட் சித்திக்கின் சொத்துக்களை கையகப்படுத்தும் நடவடிக்கைகளும் முன்னெடுக்கப்பட்டுள்ள அதேவேளை விசாரணைகளுக்கு தேவையான பல்வேறு ஆவணங்களும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் தெரிவித்துள்ளார்.
வெலே சுதா மற்றும் மொஹமட் சித்திக் ஆகியோர் குற்றப்புலனாய்வு திணைக்களத்தினால் தடுத்து வைத்து விசாரணைக்கு உட்படுத்தப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.