செய்திகள்

மொஹான் பீரிஸை பதவி விலகுமாறு ஜனாதிபதி இன்று வலியுறுத்துவார்

கூடிய விரைவில் பதவியில் இருந்து விலகிக் கொள்ளுமாறு இலங்கையின் பிரதம நீதியரசர் மொஹான் பீரிஸ{க்கு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன இன்று புதன்கிழமை எழுத்து மூலம் அறிவிக்கவிருப்பதாக அரசின் உயர்மட்ட வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

சட்ட ரீதியாக நியனம் பெறாமல் இதற்கு மேலும் பிரதமர் நீதியரசர் பதவியில் இருப்பது பொருத்தமாக இருக்காது என்றும் ஜனாதிபதி சிறிசேன அந்த கடிதத்தில் பிரதம நீதியரசர் பீரிஸ{க்கு தெரிவிக்கவிருப்பதாகவும் அந்த வட்டாரங்கள் குறிப்பிட்டுள்ளன.

மொஹான் பீரிஸ் பிரதம நீதியரசர் பதவியில் இருந்து விலகியதன் பின்னர் அந்த பதவிக்கு சிராணி பண்டாரநாயக்கவை ஒரு தினத்திகேனும் ஒரு தினத்துக்கேனும் நியமிக்கவும் அதன் பின்னர் உயர்நீதிமன்றத்தின் சிரே~;ட நீதியரசரான கே. ஸ்ரீபவனை பிரதம நீதியரசராக பதவியில் அமர்த்தவும் அரசு திட்டமிட்டிருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.