செய்திகள்

மோசமான களத்தடுப்புகளுடன் ஆரம்பமாகியுள்ள 2015 இந்தியன் பிரீமியர் லீக்

இவ்வருட ஐ.பி எல்லின் இன்னொரு போட்டியின் தலைவிதியை மோசமான களத்தடுப்பு தீர்மானித்துள்ளது.
மத்தியுஸ் அளித்த வாய்ப்பை ரஹானே தவறவிட்டதன் காரணமாக டெல்கிடார்டெவில்ஸ் அணியினர்184 ஓட்டங்களை பெற்றனர்.
பின்னர் டெல்கிடார்டெவில்ஸ் பந்து வீசிய வேளை ஐ.பிஎல்லின் இளம்வீரர் தீபக்கூடா அளித்த இரு வாய்ப்புகளை அணி தவறவிட்டதால் அவர் அணியின்போக்கையே மாற்றினார், 4 சிக்ஸர்களின் உதவியுடன் 25 பந்துகளில் 54 ஓட்டங்களை பெற்றார்
அவர் ஆட்டமிழந்த வேளை 11 பந்துகளில் 19 ஓட்டங்கள் தேவைப்பட்டன, அமித் மிஸ்ரா சிறப்பாக பந்துவீசிக்கொண்டிருந்தார்.
எனினும் இறுதி ஓவரில் கிறிஸ்மொறிஸ் மற்றும் சௌத்தீ ஜோடி வெற்றிக்கு தேவையான 12 ஓட்டங்களை பெற்றனர்.
டெல்கி டார்டெவில்ஸ் அணி ஐ.பிஎல்லில் தொடர்ந்து 12 தோல்வியை சந்தித்தது.
சிறந்த ஆரம்பத்தை டெல்கிடார்டெவில்ஸ் பெற்ற போதிலும் ராஜஸ்தான் அணியின் சுழற்பந்து வீச்சாளர்கள் நிலைமையை தமது அணிக்கு சாதகமாக மாற்றினர்.
எனினும் இந்த வருடம் இடம்பெற்றுள்ள ஐ.பில் போட்டிகளில் பார்த்து போல்இந்த போட்டியிலும் முக்கியமான தருணங்களில் களத்தடுப்பு மிகமோசமாக காணப்பட்டது.
மத்தியுஸ் 5 ஓட்டங்களை பெற்றிருந்தவேளை போக்னரின் பந்தை ரகானே கைகளை நோக்கியடித்தார் அவர் அதனை தவறவிட்டார், அதனை பயன்படுத்திய மத்தியுஸ் அடுத்த 14 பந்துகளில் 27 ஓட்டங்களை பெற்றார்.டெல்கி 184 ஓட்டங்களை பெற்றது. அவர்களது சுழற்பந்துவீச்சாளர்கள் பந்துவீசிய விதத்தை பார்க்கும்போது அவர்கள் அதிகளவான ஓட்டங்களை கொடுத்துவிட்டனர் என்றே தோன்றியது.
ராஜஸ்தான் பந்துவீசிய வேளை மிஸ்ரா ஸ்மித் மற்றும்,கருன் நாயரை வெளியேற்றினார்,பின்னர் இம்ரான் தாகிர் இரு விக்கெட்களை கைப்பற்றினார்,
ராஜஸ்தான் 14வது ஓவரில் 4 விக்கெட்களை இழந்து 107 ஓட்டங்களை பெற்றிருந்தவேளை கூடாவின் ரன்அவுட் வாய்ப்பை யுவராஜ் தவறவிட்டார். அதன் பின்னர் கூடா டெல்கியை அதிர்ச்சிக்குள்ளாக்கிய அந்த சிறிய இனிங்ஸை ஆடினார்.