செய்திகள்

மோடியின் யாழ். விஜயம் தமிழகத்தில் அரசியல் முக்கியத்துவத்தைப் பெறும்: ஹிந்துஸ்தான் ரைம்ஸ்

இரண்டு வாரங்களில் இலங்கை வரும் இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி, யாழ்ப்பாணத்துக்கும் செல்லவுள்ளது, தமிழ்நாட்டில் அரசியல் முக்கியத்துவம் வாய்ந்ததாக அமையக் கூடும் என்று இந்தியாவின் ‘ஹிந்துஸ்தான் ரைம்ஸ்’ இன்று செய்தி வெளியிட்டுள்ளது.

இலங்கை செல்லும் மோடி, தமிழர்கள் அதிகம் வாழும் யாழ்ப்பாணத்துக்கும் செல்கின்றார். எதிர்வரும் 12-ஆம் திகதி மொரிசியசில் இருந்து இந்தியப் பிரதமர் கொழும்பு வருவார்.

விடுதலைப் புலிகளின் முன்னாள் கோட்டையான யாழ்ப்பாணத்துக்கு இந்தியப் பிரதமர் மோடி மேற்கொள்ளவுள்ள பயணம், தமிழ்நாட்டில் அரசியல் முக்கியத்துவம் வாய்ந்ததாக அமையக் கூடும். தமிழ்நாட்டில் அடுத்த ஆண்டு சட்டமன்றத் தேர்தல் நடக்கவுள்ளது.

தென்னிந்தியாவில் தனது பலத்தைப் பெருக்குவதற்கு பாஜக முயற்சித்து வருகிறது” என்றும் ஹிந்துஸ்தான் ரைம்ஸ் தெரிவித்துள்ளது.