செய்திகள்

மோடியின் விஜயத்தால் சீனாவுக்கு பாதிப்பு இல்லையாம்

இந்திய பிரதமர் நரேந்திர மோடியின் இலங்கை விஜயமானது சீனா – இலங்கை உறவில் பாதிப்பை ஏற்படுத்தாது என சீன ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

மோடியின் இலங்கை விஜயமானது சீனா – இலங்கை உறவை மேலும் வலுப்படுத்தும் என சிங்ஹ_வா செய்தி சேவை செய்தி வெளியிட்டுள்ளது.

புதிய இலங்கை – இந்திய உறவுகளுக்கு தமது ஒத்துழைப்பை வழங்க சீனா தயாராக உள்ளதாகவும் இந்த செய்தியில் கூறுப்பட்டுள்ளது.

அத்துடன் இலங்கைக்கு உதவிகளை சீனா தொடர்ந்தும் வழங்கும் என சிங்ஹ_வா செய்தி சேவை தெரிவித்துள்ளது.