செய்திகள்

மோடியின் விஜயம் காலத்துக்குப் பொருத்தமானது: சம்பந்தன்

இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியின் விஜயம் காலத்துக்குப் பொருத்தமானதாக அமைந்திருக்கிறது என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா . சம்பந்தன் தெரிவித்திருக்கிறார்.

இந்திய இல்லத்தில் பிரதமர் மோடி கலந்து கொண்ட வரவேற்பு நிகழ்வின் போதே சம்பந்தன் இக்கருத்தை தெரிவித்துள்ளார். “தமிழர்களின் பிரச்சினைக்கு தீர்வு காண வேண்டிய தேவை தொடர்பாக கவனத்தை செலுத்துவதாக இந்த விஜயம் அமைந்திருக்கிறது. அரசியலமைப்பின் 13 ஆவது திருத்தத்தை அமுல்படுத்துவதற்கான தேவை மற்றும் அதற்கு அப்பால் செல்ல வேண்டிய தேவைப்பாடு என்பவை தொடர்பாக கவனத்தை செலுத்துவதற்கான தன்மையை கொண்டிருக்கும் காலத்துக்குத் தேவையான விஜயமாக இது அமைந்திருக்கிறது “என்று கூறியுள்ளார்.

இதேவேளை முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷவுடனான மோடியின் சந்திப்பு குறித்து கேட்கப்பட்ட போது, “அரசியல் அரங்கின் சகல தரப்பினரையும் மோடி சந்திப்பது சிறப்பான விடயம்” என அவர் பதிலளித்துள்ளார்.

பிரச்சினைக்கு தீர்வு காண்பதற்கு சகல தரப்பினரதும் கருத்தொருமைப்பாடு தேவைப்படுவதால் பிரதமர் மோடி சகலரையும் சந்திப்பது நல்லது என்று சம்பந்தன் தெரிவித்துள்ளார்.