செய்திகள்

மோடியுடன் இன்று மைத்திரி தனியாகப் பேச்சு: ஐ.நா. அறிக்கை குறித்தும் ஆராய்வர்

புதுடில்லி சென்றுள்ள ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுடன், இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி இன்று நடத்தவுள்ள பேச்சுக்களின் போது, ஐ.நா மனித உரிமைகள் பேரவை அறிக்கை குறித்து விரிவாக ஆராயப்படும் எனத் தெரியவந்திருக்கின்றது.

இலங்கைக்கு எதிரான போர்க்குற்ற மற்றும் மனித உரிமைகள் அறிக்கையை இந்தியாவும் கூட அதிகமாக கவனித்து வருகிறது. புதிய அரசாங்கம் பதவியேற்ற பின்னர், கொழும்புடன் இந்தியா நெருக்கமான உறவுகளை ஏற்படுத்தியுள்ளது.

டில்லி சென்றுள்ள மைத்திரிபால சிறிசேனவுடன் இன்று இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி இன்று தனியாக – 45 நிமிடங்கள் பேச்சு நடத்தவுள்ளார். இன்று நண்பகல் இந்தப் பேச்சுக்கள் இடம்பெறும். இதில் இருநாடுகள் தொடர்பான பல்வேறு விவகாரங்கள் குறித்து விரிவாக பேசப்படும்.

அமெரிக்காவின் ஆதரவுடன் ஐ.நா மனித உரிமைகள் பேரவையில் கொண்டு வரப்பட்ட தீர்மானம், மற்றும் போர்க்குற்ற விசாரணை அறிக்கை, குறித்தும் இதன் போது ஆராயப்படும்.

அத்துடன், தமிழர் பிரச்சினைக்கு விரைவான தீர்வு காண கொழும்பு முன்னுரிமை கொடுக்க வேண்டும் என்றும், 13வது திருத்தச்சட்டத்தையும், நல்லிணக்க ஆணைக்குழுவின் பரிந்துரைகளையும், முழுமையாக நடைமுறைப்படுத்த வேண்டும் என்றும், இந்தியப் பிரதமர் வலியுறுத்துவார் என்றும் எதிர்பார்க்கப்படுகின்றது.

1-1

1-0