செய்திகள்

மோடியை சந்தித்து பேச மைதிரிக்கு 45 நிமிடங்கள்

இந்தியாவுக்க விஜயம் செய்யவுள்ள இலங்கை ஜனாதிபதி மைதிரிக்கு 45 நிமிடங்கள் மோடியுடன் சந்தித்து பேச நேரம் ஒதுக்கப்பட்டுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன.

எதிர்வரும் 16ஆம்  ஞாயிற்றுகிழமை இந்தியாவுக்கு மைத்திரி விஜயம் செய்யவுள்ளார்.

இந்திய ஜனாதிபதி மாளிகையான ராஸ்ரபதிபவனில் இந்திய பிரதமர் நரேந்திர மோடியை சந்திக்க ஏற்பாடாகியுள்ளது. இச்சந்திப்புக்கு 45 நிமிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளது.

ஜனாதிபதி மைத்திரியுடன் அமைச்சர்களான மங்கள சமரவீர, ராஜித சேனாரத்ன, சம்பிக்க ரணவக்க, டி.எம்.சுவாமிநாதன் ஆகியோர் செல்லவுள்ளனர்.