செய்திகள்

மோடி மற்றும் அமைச்சர்களின் வெளி நாட்டு பயணச் செலவு 567 கோடி!

பிரதமர் மோடி மற்றும் மத்திய அமைச்சர்களின் வெளி நாட்டு பயணங்களுக்காக கடந்த ஓராண்டில் 567 கோடி ரூபாய் செலவிடப்பட்டுள்ளது. இது முந்தைய ஆண்டின் செலவைவிட 80 சதவீதம் அதிகமாகும்.

2015-2016ம் ஆண்டு நிதி ஆண்டில் பிரதமர் மோடி மற்றும் மத்திய அமைச்சர்களின் பயணச் செலவுக்காக 269 கோடி ரூபாய் ஆகும் எனக் கணிக்கப்பட்டிருந்த நிலையில் அது 567 கோடி ரூபாயாக அதிகரித்துள்ளதாக பட்ஜெட் ஆவணங்கள் மூலம் தெரிய வந்துள்ளது. ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சியில் 75 அமைச்சர்கள் இருந்தனர். தற்போதை பாஜக ஆட்சியில் 65 அமைச்சர்களே உள்ளனர். எனினும் மத்திய அமைச்சர்களின் ஊதியச் செலவு கடந்த ஆட்சியில் இருந்ததைவிட 25 சதவீதம் அதிகரித்துள்ளதாக தகவல்கள் கூறுகின்றன.

N5