செய்திகள்

மோட்டர் சைக்கிள் விபத்தில் ஒருவர் கவலைக்கிடம்

நோர்வூட் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பகுதியில் இன்று காலை இடம்பெற்ற மோட்டர் சைக்கிள் விபத்தில் இருவர் படுங்காயங்களுடன் டிக்கோயா மாவட்ட வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக நோர்வூட் பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

இவ்விபத்து தொடர்பாக மேலும் தெரியவருவதாவது….

மஸ்கெலியா பிரவுன்ஸ்வீக் தோட்டப்பகுதியிலிருந்து அட்டன் நோக்கி சென்ற மோட்டர் சைக்கிளும் நோர்வூட் அயரபி தோட்டப்பகுதியிலிருந்து மஸ்கெலியா வரை சென்ற மோட்டர் சைக்கிளும் அட்டன் மஸ்கெலியா பிரதான வீதியில் நோர்வூட் நியூவெளி பகுதியில் வைத்து நேர்க்கு நேர் மோதி விபத்துக்குள்ளாகியுள்ளது.

இவ்விபத்து இன்று காலை 7.30 மணியளவில் இடம்பெற்றுள்ளதாக நோர்வூட் பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

மோட்டர் சைக்கிள்களின் சாரதிகள் இருவருமே இவ்வாறு படுங்காயங்களுக்குள்ளாகியுள்ளனர். இதில் ஒருவர் கவலைக்கிடமாக இருப்பதாக நோர்வூட் பொலிஸார் மேலும் தெரிவிக்கின்றனர்.

நோர்வூட் அயரபி தோட்டப்பகுதியிலிருந்து மஸ்கெலியா வரை சென்ற மோட்டர் சைக்கிள் சாரதியின் கவனயீனம் காரணமாகவே இவ்விபத்து நேர்ந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இவ்விபத்து தொடர்பான மேலதிக விசாரணைகளை நோர்வூட் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

DSC09465