செய்திகள்

மோட்டார்; சைக்கிள் தீக்கிரையாக்கப்பட்ட சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேகநபர் கைது.

யாழ்.ஏழாலைப் பகுதியில் இடம்பெற்ற குழு மோதலில் மோட்டார் சைக்கிள் எரித்த சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேகநபரொருவரை நேற்றையதினம் புதன்கிழமை தெல்லிப்பழைப் பொலிஸார் கைது செய்துள்ளனர்.
குழு மோதலில் ஈடுபட்டவர்களில் ஒரு குழுவைச் சேர்ந்தவர்கள் மற்றைய குழுவைச் சேர்ந்தவர்களைத் துரத்திச் சென்றுள்ளனர். இதன் போது கைவிடப்பட்ட சுமார் மூன்று இலட்சம் ரூபா பெறுமதியான மோட்டார்ச் சைக்கிளொன்றைத் துரத்திச் சென்ற மற்றைய குழுவினர் தீக்கிரையாக்கியிருந்தனர்.
குறித்த சம்பவம் தொடர்பில் புலன் விசாரணைகளை மேற்கொண்ட பொலிஸார் இன்றைய தினம் சுன்னாகம் பகுதியைச் சேர்ந்த சந்தேகநபரொருவரைக் கைது செய்துள்ளதாகத் தெல்லிப்பழைப் பொலிஸார் தெரிவித்தனர்.