செய்திகள்

மோரிஸின் அதிரடி வீண்: குஜராத் அணி கடைசி பந்தில், ஒரு ரன்னில் த்ரில் வெற்றி

டெல்லி அணிக்கு எதிரான பரபரப்பான ஆட்டத்தில் குஜராத் அணி கடைசி பந்தில், ஒரு ரன் வித்தியாசத்தில் த்ரில் வெற்றி பெற்றது. மோரிஸின் அதிரடி ஆட்டம் வீணானது.புதுடெல்லியில் நடைப்பெற்ற வரும் ஐ.பி.எல். லீக் போட்டியில் டெல்லி டேர்டெவில்ஸ் அணியும், குஜராத் லயன்ஸ் அணியும் விளையாடின. டாஸ் வென்ற டெல்லி அணியின் கேப்டன் ஜாகீர்கான் முதலில் பந்துவீச முடிவு செய்தார்.

28-2
குஜராத் அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் 6 விக்கெட்டு இழப்பிற்கு 172 ரன்கள் எடுத்தது. மெக்கல்லம் 60(36), சுமித் 53(30) ரன்களும் எடுத்தனர். டெல்லி தரப்பில் தாகீர் 3 விக்கெட்களையும், மோரிஸ் 2 விக்கெட்களையும் வீழ்த்தினார்கள்.
இதையடுத்து 173 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் டெல்லி அணி விளையாடியது. ஆனால் டெல்லி அணி 16 ரன்கள் எடுப்பதற்குள் 3 விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது. டி காக் 5 ரன்கள் எடுத்து ஏமாற்றம் அளித்தார். சாம்சன் 1 ரன்னிலும், நாயர் 9 ரன்களிலும் ஆட்டமிழந்தனர்.28-3

இதனை தொடர்ந்து டுமினியுடன், பாண்ட் ஜோடி சேர்ந்தார். இந்த ஜோடி சிறிது நேரம் நிலைத்து நின்று ஆடியது. இருப்பினும் பாண்ட் 17 ரன்களிலும் 20 எடுத்திருந்த போது ஆட்டமிழந்தார். இதனால் டெல்லி அணி தோல்வி அடைந்துவிடும் என்று கருதப்பட்டது.அப்போது, டுமினியுடன், மோரிஸ் ஜோடி சேர்ந்தார். மோரிஸ் தொடக்கம் முதலே அடித்து விளையாடினார். டுமினி சீரான இடைவேளையில் ரன்களை சேர்த்தார். ஒரு கட்டத்திற்கு மேல் மோரிஸ் சிக்ஸர்களாக விளாச ஆரம்பித்தார். மோரிஸ் அடிக்கும் பந்துகள் எல்லாம் எல்லைக் கோட்டிற்கு வெளியே சென்று கொண்டிருந்தது.

அதிரடியாக விளையாடிய மோரிஸ் 17 பந்துகளில் அரைசதம் விளாசினார். மோரிஸின் மாயாஜாலத்தால் ஆட்டம் டெல்லியின் பக்கம் வந்தது. சிறப்பாக விளையாடி வந்த டுமினி 48(43) ரன்கள் எடுத்திருந்த போது பிராவோ பந்துவீச்சில் ஆட்டமிழந்தார்.

அப்போது டெல்லி அணி 17.1 ஓவர்களில் 144 ரன்கள் எடுத்திருந்தது. தொடந்து அதே ஓவரில் மோரிஸ் இரண்டு பவுண்டரிகளை விளாசினார். கடைசி 2 ஓவர்களில் 18 ரன்கள் தேவைப்பட்டது.
19-வது ஓவரை பிரவின் குமார் வீசினார். மிகவும் கட்டுக் கோப்பாக வீசி 4 ரன்களை மட்டுமே பிரவின் விட்டுக் கொடுத்தார். இதனால் ஆட்டத்தில் பரபரப்பு ஏற்பட்டது. கடைசி ஓவரில் 6 பந்துகளில் 15 ரன்கள் எடுக்க வேண்டிய நிலை ஏற்பட்டது.
கடைசி ஓவரை பிராவோ வீசினார். முதல் பந்திலே மோரிஸ் பவுண்டரி விளாசினார். இதனால் கடைசி 5 பந்துகளில் 11 ரன்கள் எடுக்க வேண்டியிருந்தது. அடுத்த இரண்டு பந்துகளில் தலா ஒரு ரன் மட்டுமே எடுக்கப்பட்டது.
4-வது பந்தில் இரண்டு ரன்கள் எடுத்தார். 5-வது பந்திலும் இரண்டு ரன்கள் எடுக்க கடைசி பந்தில் 4 ரன்கள் எடுக்க வேண்டியிருந்தது. ஆனால் பிராவோ நேர்த்தியாக பந்து வீச, அந்த பந்தில் இரண்டு பந்துகள் மட்டுமே எடுக்க முடிந்தது. மோரிஸ் 32 பந்துகளில் 82 ரன்கள் எடுத்து இறுதி வரை ஆட்டமிழக்காமல் இருந்தார். அதில் 4 பவுண்டரிகளும், 8 சிக்ஸர்களும் அடங்கும்.
பிரவின் குமார் 4 ஓவர்களில் 13 ரன்கள் மட்டுமே விட்டுக் கொடுத்தார். குல்கர்னே 4 ஓவர்களில் 19 மட்டுமே வழங்கி 3 விக்கெட்டுக்களை சாய்த்தார். அதில் ஒரு மெய்டன் ஒருவரும் அடங்கும்.டெல்லி அணி 20 ஓவர்கள் முடிவில் 5 விக்கெட் இழப்பிற்கு 171 ரன்கள் எடுத்தது. இதனால் ஒரு ரன்கள் வித்தியாசத்தில் டெல்லி அணி வெற்றி வாய்ப்பை இழந்தது. சுரேஷ் ரெய்னாவின் குஜராத் அணி தனது 5 வது வெற்றியை ருசித்தது. டெல்லி அணி 2 தோல்வியை தழுவியது.
தன்னுடைய அதிரடியான ஆட்டத்தால் மாயாஜாலம் நிகழ்த்திய மோரிஸ் ஆட்டநாயகனாக தேர்வு செய்யப்பட்டது. அவர் 82 ரன்கள் குவித்ததோடு, இரண்டு விக்கெட்டுக்களையும் எடுத்தார்.

28-5