செய்திகள்

யார் சிறி லங்கா சுதந்திரக்கட்சியின் தலைவரோ அவருடன் நான் செயற்படுவேன்: அங்கஜன்

Angajan_0

சிறி லங்கா சுதந்திரக்கட்சியின் தலைவரோ அவரே எம்மை வழிநடத்துவர் என்று ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சியின் அமைப்பாளரும் வடமாகாணசபை உறுப்பினருமான அங்கஜன் இராமநாதன் தெரிவித்துள்ளார்.

அவர் மேலும் தெரிவிக்கையில் :-

நான் எப்போதும்  சிறி லங்கா சுதந்திரக் கட்சியைச் சேர்ந்தவன். வடமாகாணசபைத் தேர்தலில் ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சியில் போட்டியிட்டு வெற்றிபெற்றவன் நான். அன்று அந்தக் கட்சியிலிருந்தே மக்கள் என்னை தெரிவு செய்தார்கள். எனக்கு எமது கட்சி மிகவும் முக்கியம். எமது கட்சியின் புதிய தலைவராக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனா அவர்கள் கட்சிக்குத் தலைமை தாங்கவுள்ளார்.

யார் கட்சியின் தலைவரோ அவர் தான் எம்மை வழிநடத்துபவர். அந்த வகையில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அவர்களின் வழிநடத்தலில், நான் அவருடன் சேர்ந்து செயற்பட உள்ளேன். புதிய ஜனாதிபதியுடன் இணைந்து வடமாகாணத்தில் பட்டதாரிகள் சங்கத்தை செயற்படுத்துவேன். இதுவரை மேற்கொண்டுவந்த சங்கத்தின் செயற்பாடுகள் அனைத்தையும் மேற்கொள்வேன் என்று தெரிவித்தார்.