செய்திகள்

யாழில் அனுமதிப்பத்திரமன்றி மரச்சலாகைகளை எடுத்துச் சென்ற சாரதி பிணையில் செல்ல அனுமதி

யாழ்.மல்லாகத்திலிருந்து அளவெட்டிப் பகுதிக்கு அனுமதிப்பத்திரமின்றி மரச்சலாகைகளைக் கொண்டு சென்ற வடிரக வாகனத்தையும்,சாரதியையும் கைப்பற்றிய பொலிஸார் சந்தேகநபரை மல்லாகம் நீதிமன்றத்தில் நேற்று முன்தினம் ஆஜர்படுத்தினர்.

இதன்போது அனுமதிப்பத்திரமின்றி 8 ஆயிரம் ரூபா பெறுமதியான மரச்சலாகைகளை வடிரக வாகனத்தில் எடுத்துச் சென்ற சாரதியை 50 ஆயிரம் ரூபா பெறுமதியான இரண்டு ஆட்பிணையில் செல்ல மல்லாகம் நீதவான் உத்தரவிட்டார். அத்துடன் சலாகைகளின் பெறுமதி தொடர்பில் மரக்கூட்டுத்தாபனத்திற்குத் தெரியப்படுத்தி அதன் அறிக்கையை மன்றில் சமர்ப்பிக்குமாறு தெல்லிப்பழைப் பொலிஸாருக்கு உத்தரவிட்டதுடன் வழக்குத் தவணையை எதிர்வரும் 15 ஆம் திகதிக்கும் ஒத்தி வைத்தார். யாழ்.நகர் நிருபர்-