செய்திகள்

யாழில் இன்று மேற்கொள்ளப்பட்ட கொரோனா பரிசோதனைகளில் ஒருவருக்கும் கொரோனா தொற்று இல்லை

இன்றைய தினம் யாழில் மேற்கொள்ளப்பட்ட கொரோனா பரிசோதனைகளில் ஒருவருக்கும் கொரோனா தொற்று இல்லை என யாழ் போதனா வைத்தியசாலை பணிப்பாளர் வைத்தியர் சத்தியமூர்த்தி தெரிவித்துள்ளார்.யாழ் போதனா வைத்தியசாலையில் மூவர், கிளிநொச்சி பொது வைத்தியசாலையில் மூவர் மற்றும் சண்டிலிப்பாய் சுகாதார வைத்திய அதிகாரி பிரிவை சேர்ந்த 16 பேர் என மொத்தமாக இன்று 20 பேருக்கு பரிசோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளது.அவர்களில் எவருக்கு கொரோனா தொற்று இல்லை என யாழ் போதனா வைத்தியசாலை பணிப்பாளர் வைத்தியர் சத்தியமூர்த்தி சற்று முன்னர் உறுதி செய்துள்ளார்.(15)