செய்திகள்

யாழில் உணர்வுபூர்வமாக நடைபெற்ற தந்தை செல்வாவின் 38 ஆம் ஆண்டு நினைவு நாள்

தந்தை செல்வாவின் 38 ஆவது ஆண்டு நினைவு நாள் அஞ்சலியும் நினைவுரையும் இன்று ஞாயிற்றுக்கிழமை காலை 09.30 மணி முதல் யாழ்.நகரில் அமைந்துள்ள செல்வா சதுக்கத்தில் தந்தை செல்வா நினைவு நாள் அறங்காவற் குழுவின் தலைவர் கலாநிதி எஸ்.ஜெபநேசன் தலைமையில் இடம்பெற்றது.

இந் நிகழ்வில் இலங்கைத் தமிழரசுக் கட்சியின் தலைவர் மாவை சேனாதிராஜா,செயலாளர் எஸ்.குலநாயகம்,தந்தை செல்வாவின் மகன் சந்திரகாசன்,வடமாகாணக் கல்விமைச்சர் எஸ்.குருகுலராஜா, வடமாகாண சபை உறுப்பினர் த.சித்தார்த்தன் உட்படப் பலர் கலந்து கொண்டு தந்தை செல்வாவின் நினைவுத் தூபிக்கு மலர் மாலை அணிவித்ததைத் தொடர்ந்து தந்தை செல்வாவின் நினைவுத் தூபிக்கு உணர்வுபூர்வமாக மலரஞ்சலி செலுத்தப்பட்டது.

இந் நிகழ்வில் அஞ்சலியுரைகளை ஸ்ரீலஸ்ரீ சோமசுந்தர தேசிக ஞானசம்பந்த தேசிக பரமாச்சாரிய சுவாமிகள்,அருட்தந்தை சி.எஸ்.ஜெயக்குமார் அடிகள்,மௌலவி எம்.ஐ.மஹ்மத்(பலாஹி) ஆகியோர் ஆற்றினர்.சிறப்புரையை கனடாவைச் சேர்ந்த சட்டத்தரணி கனகமனோகரனும்,தந்தை செல்வாவின் நினைவுப் பேருரையை கோப்பாய் ஆசிரியர் பயிற்சிக் கலாசாலையின் உப அதிபர் ச.லலீசனும் நிகழ்த்தினர்.சுன்னாகத்தைச் சேர்ந்த சிவனொளி மகேஸ்வரி என்ற குடும்பப் பெண்மணி தந்தை செல்வா மீது கொண்டிருந்த அளவற்ற பற்றைக் கவி வரிகளில் வடித்தார்.

இந் நினைவு நாள் நிகழ்வில் தமிழரசுக் கட்சியின் மூத்த உறுப்பினர் பேராசிரியர் க.சிற்றம்பலம்,தமிழ்த் தேசியப் பற்றாளர் மறவன்புலவு சச்சிதானந்தன், நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன், வடமாகாண சபை உறுப்பினர்களான அரியகுட்டி பரஞ்சோதி ,பா.கஜதீபன் மற்றும் தமிழரசுக் கட்சிpயின் உறுப்பினர்கள்,பிரதேச சபை உறுப்பினர்கள்,ஆர்வலர்கள் எனப் பெருமளவானோர் கலந்து கொண்டனர். ( யாழ்.நகர் நிருபர்)

IMG_2506 IMG_2511 IMG_2514

IMG_2516