செய்திகள்

யாழில் ஊடகவியலாளர்களுக்கான செயலமர்வு

தேசிய ஒற்றுமைக்கான ஊடக பயன்பாடு’ எனும் தொனிப்பொருளில் மாகாண ஊடகவியலாளர்களுக்கான பயிற்சிப்பட்டறை இன்று (சனிக்கிழமை) யாழ். மாவட்டச் செயலக கேட்போர் கூடத்தில் நடைபெற்றது.

இலங்கை பத்திரிகை பேரவையின் ஏற்பாட்டில் யாழ். மாவட்டச் செயலகத்தின் ஒருங்கமைப்பில் நடைபெற்ற இப் பயிற்சிப்பட்டறையில் யாழ். மாவட்ட அரச அதிபர் நா.வேதநாயகன், யாழ். மாவட்ட மேலதிக அரச அதிபர் பா.செந்தில்நந்தனன், இலங்கை பத்திரிகை பேரவையின் தலைவர் கோகல வெல்லால பந்துல மற்றும் வட மாகாண அவைத்தலைவர் சி.வி.கே.சிவஞானம் உட்பட ஊடகவியலாளர்கள் பலர் கலந்து கொண்டனர்.

இதன்போது, தேசிய ஒற்றுமை மற்றும் நல்லிணக்கத்தைக் கருத்தில் கொண்டு வடக்கையும் தெற்கையும் இணைப்பதற்கான செயற்பாடுகளை ஊடகவியலாளர்கள் முன்னெடுக்க வேண்டும் என வளவாளர்களால் கருத்துரைக்கப்பட்டது.

N5