செய்திகள்

யாழில் கூட்டுறவுச் சங்கங்கள் ஊடாக கர்ப்பிணித் தாய்மாருக்கான சத்துணவுப் பொருட்கள்

யாழ்.குடாநாட்டில் பலநோக்குக் கூட்டுறவுச் சங்கங்கள் ஊடாகக் கர்ப்பிணித் தாய்மாருக்கான சத்துணவுப் பொருட்களை விநியோகிப்பதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

இந்தச் சத்துணவுப் பொருட்களைக் கூட்டுறவுச் சங்கங்கள் மூலமாக விநியோகிப்பது தொடர்பான கலந்துரையாடலொன்று கடந்த வாரம் வடக்கு மாகாண விவசாய அமைச்சர் பொ.ஐங்கரநேசன் தலைமையில் அமைச்சின் அலுவலகத்தில் இடம்பெற்றது.

இதன் போது கர்ப்பிணித் தாய்மார்களுக்கு வழங்கப்பட்ட சத்துணவுப் பொருட்களைக் கூட்டுறவுச் சங்கங்கள் ஊடாக விநியோகிக்க ஏற்ற நடவடிக்கைகள் மேற்கொண்டுள்ளப்பட்டுள்ளதாக அமைச்சர் தெரிவித்தார்.

கூட்டத்தில் சங்கங்களின் தலைவர்கள், பொதுமுகாமையாளர்கள் ஆகியோர் கலந்து கொண்டனர்.

யாழ்.நகர் நிருபர்-