செய்திகள்

யாழில் சிவில் சமூகத்தினர், அரச அதிகாரிகளைச் சந்தித்தார் சம்பந்தன்

யாழ். குடாநாட்டிற்கு விஜயம் செய்திருக்கும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் இன்று மாலை சிவில் சமூகத்தினர், அரச அதிகாரிகள் மற்றும் அரசாங்க அதிபர் ஆகியோரைச் சந்தித்து சமகால அரசியல் நிலைவரம் தொடர்பில் கருத்துகளை பகிர்ந்து கொண்டதுடன், அவர்களிடமிருந்து யாழ். குடாநாட்டினுடைய தற்போதைய நிலைவரங்கள் தொடர்பிலும் கேட்டறிந்து கொண்டார்.

இச்சந்திப்புகளில் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர்கள் எம். ஏ. சுமந்திரன், மாவை. சேனாதிராஜா, சரவணபவன் ஆகியோரும் கலந்து கொண்டிருந்தனர்.

n10