செய்திகள்

யாழில் நாளை பிரம்மாண்டமான மேதின எழுச்சிப் பேரணி

வடக்கின் ஐந்து மாவட்டங்களையும் சேர்ந்த கூட்டுறவு அமைப்புக்களும் கூட்டுறவுத் தொழிற்சங்க அமைப்புக்களும் இணைந்து இம் முறை மேதினத்தை கூட்டுறவு மேதினமாக நாளை வெள்ளிக்கிழமை(01.05.2015) யாழ்ப்பாணத்தில் கொண்டாடவுள்ளன.

வடமாகாண முதலமைச்சர் சி.வி.விக்கினேஸ்வரன் பிரதம விருந்தினராகக் கலந்து கொள்ளவுள்ள நிகழ்வில் நல்லூர் சங்கிலியன் பூங்காவிலிருந்து யாழ்.வீரசிங்கம் மண்டபத்தை நோக்கிக் கூட்டுறவாளர்களின் மேதின எழுச்சிப் பேரணி இடம்பெறுமெனவும்,பிற்பகல் 4.30 மணிக்கு வீரசிங்கம் மண்டபத்தில் பொதுக் கூட்டம் இடம்பெறுமெனவும் ஏற்பாட்டுக் குழுவினர் தெரிவித்துள்ளனர்.இந்த மேதின நிகழ்வில் கூட்டுறவுக்குப் பலம் சேர்க்கும் வகையில் அனைவரையும் அணி திரளுமாறு அவர்கள் மேலும் கோரிக்கை விடுத்துள்ளனர்.

யாழ்.நகர் நிருபர்-