செய்திகள்

யாழில் பொலிஸ் உயரதிகாரிகள் சிலருக்கு இடமாற்றம்

யாழ் பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி உள்ளிட்ட சிரேஷ்ட பொலிஸ் உத்தியோகத்தர்கள் சிலருக்கு உடனடியாக அமுலுக்கு வரும் வகையில் இடமாற்றம் வழங்க பொலிஸ் மா அதிபர் உத்தரவிட்டுள்ளார்.

இதன்படி வழங்கப்பட்ட இடமாற்றங்களின் விபரங்கள் –

யாழ் பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி சிரேஸ்ட பொலிஸ் அத்தியட்சகர் லக்ஷ்மன் வீரசேகர, சீதாவாக்‍கபுர பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரியாக இடமாற்றப்பட்டுள்ளார். சிரேஸ்ட பொலிஸ் அத்தியட்சகர் டப்ளியூ.கே.ஜயலத் யாழ் பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரியாக நியமிக்கப்பட்டுள்ளார்.

பொலிஸ் அத்தியட்சகர் ஜி.ஜே.ஏ.விஜயசேகர யாழ் மாவட்டத்தில் இருந்து கிளிநொச்சிக்கு இடமாற்றப்பட்டுள்ளார். உதவி பொலிஸ் அத்தியட்சகர் டி.எஸ்.டி.வீரசிங்க கிளிநொச்சியில் இருந்து யாழ் மாவட்டத்திற்கு இடமாற்றப்பட்டுள்ளார்.

உதவி பொலிஸ் அத்தியட்சகர் யு.ஏ.பி. பெர்னாண்டோ மன்னாரில் இருந்து யாழ் மாவட்டத்திற்கு இடமாற்றப்பட்டுள்ளார்.
உதவி பொலிஸ் அத்தியட்சகர் பி.ஏ.கே.ஏ. சேனாரத்ன யாழ் மாவட்டத்தில் இருந்து முல்லைத்தீவு மாவட்டத்திற்கு இடமாற்றப்பட்டுள்ளார். உதவி பொலிஸ் அத்தியட்சகர் ஆர்.ஏ.டி.ஈ.எல். ரன்தெனிய முல்லைத்தீவு மாவட்டத்தில் இருந்து யாழ் மாவட்டத்திற்கு இடமாற்றப்பட்டுள்ளார்.

மேலும் ஊர்காவல்துறை தலைமையக பொலிஸ் பரிசோதகர் கிவ்.ஆர்.பெரேரா, மன்னார் பொலிஸ் நிலையத்திற்கும் யாழ்ப்பாணம் பொலிஸ் நிலையை தலைமையக பொலிஸ் பரிசோதகர் பீ.எம்.ஆர்.கே.பி.பாலசூரிய வவுனியா பொலிஸ் பிரிவுக்கும் இடமாற்றப்பட்டுள்ளனர்.

அத்துடன் வெல்லவத்தை பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி எச்.யூ.கே.வுட்லர் யாழ் தலைமையக பொலிஸ் பரிசோதகராகவும் இடமாற்றம் வழங்கி உத்தரவிடப்பட்டுள்ளது.