செய்திகள்

யாழில் போக்குவரத்து விதிமுறைகளை மீறியவர்களுக்கெதிராகச் சட்ட நடவடிக்கை

யாழ்ப்பாணம் வட்டுக் கோட்டைப் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதிகளில் போக்குவரத்து விதிமுறைகளை மீறிய வாகனச் சாரதிகள் மூவருக்கு 28 ஆயிரம் ரூபா கடந்த புதன்கிழமை (22.04.2015) அபராதம் விதித்துத் தீர்ப்பளித்தார் மல்லாகம் நீதவான் கறுப்பையா ஜீவராணி.

மதுபோதையில் வாகனம் செலுத்திய சாரதியொருவரின் சாரதி அனுமதிப்பத்திரத்தினை மூன்று மாத காலம் இரத்துச் செய்து உத்தரவிட்ட நீதவான் 7 ஆயிரம் ரூபா அபராதம் விதித்தும் தீர்ப்பளித்தார்.

அதேபோன்று சுழிபுரம் பகுதியில் அனுமதிப்பத்திரமின்றி மதுபோதையில் மோட்டார்ச் சைக்கிள் செலுத்திய சாரதிக்குப் பத்தாயிரம் ரூபாவும், மதுபோதையில் தலைக்கவசமின்றி மோட்டார்ச் சைக்கிள் செலுத்தியவருக்கு 11 ஆயிரம் ரூபா தண்டமாகச் செலுத்துமாறும் நீதவான் உத்தரவிட்டார்.

யாழ்.நகர் நிருபர்-