செய்திகள்

யாழில் போதைப் பொருள் விற்பனை, பாலியல் தொந்தரவுள்ள 28 இடங்கள் அடையாளம் காணப்பட்டுள்ளன

யாழ்.மாவட்டத்தில் போதைப் பொருள் விற்பனை,பாலியல் தொந்தரவுள்ள 28 இடங்கள் என்பன அடையாளம் காணப்பட்டு இது தொடர்பான விபரங்கள் வடமாகாண சிரேஷ்ட பொலிஸ்மா அதிபரிடம் யாழ்.மாவட்டச் செயலகத்தால் அண்மையில் கையளிக்கப்பட்டுள்ளன.

யாழ்.மாவட்டத்தில் அதிகரித்துச் செல்லும் வன்முறைகள் தொடர்பில் மாவட்டச் செயலகத்தில் அண்மையில் நடந்த சிறுவர் பாதுகாப்புக் குழுக் கூட்டத்தில் கவனம் செலுத்தப்பட்டது.

பாடசாலை மாணவர்களுக்குத் திட்டமிட்ட ரீதியில் போதைப் பொருள் விநியோகிக்கப்படுவது மற்றும் மதுபானங்கள் வழங்கப்படுவது தொடர்பிலும் இந்தக் கூட்டத்தின் போது ஆராயப்பட்டது.
யாழ்.நகர் நிருபர்-