செய்திகள்

யாழில் வர்த்தகர்களுக்கெதிராக வழக்குத் தாக்கல்

யாழ்.நகர் வியாபார நிலையங்களில் நிறுவை அளவை கருவிகளுக்கு(தராசு) முத்திரை பதிக்காமல் பயன்படுத்திய 15 வியாபாரிகளுக்கெதிராக நீதிமன்றத்தில் வழக்குத் தாக்கல் செய்யப்படவுள்ளது.

இந்தப்; பகுதியிலுள்ள 12 நகை வியாபார நிலையங்கள் மற்றும் 3 பல்பொருள் வர்த்தக நிலையங்களுக்கெதிராகவே வழக்குத் தாக்கல் செய்யப்படவுள்ளது.

யாழ்.நகரிலுள்ள வியாபார நிலையங்களில் பயன்படுத்தும் நிறுவை அளவைகளுக்கு(தராசு) முத்திரையிடப்பட வேண்டும் என யாழ்.மாவட்ட அளவீட்டு அலகுகள் நியமங்கள் பிரிவினரால் ஏற்கனவே அறிவிப்பு விடுக்கப்பட்டிருந்தது.

இந்த நிலையிலேயே கஸ்தூரியார் வீதி மற்றும் யாழ்.நகரை அண்டிய பகுதிகளில் முத்திரை பொறிக்கப்படாமல் தராசுகள் பயன்படுத்தப்பட்டமை அண்மையில் நடாத்தப்பட்ட பரிசோதனையின் போது கண்டுபிடிக்கப்பட்டது.

இவ்வாறான தராசுகளைப் பயன்படுத்தியவர்களுக்கெதிராக எதிர்வரும்-22 ஆம் திகதி யாழ்.நீதவான் நீதிமன்றில் வழக்குத் தாக்கல் செய்யப்படவுள்ளதாக யாழ்.மாவட்ட அளவீட்டு அலகுகள் நியமங்கள் பிரிவின் பொறுப்பதிகாரி பி.ராஜேஸ்வரன் தெரிவித்தார்.