செய்திகள்

யாழ்ப்பணத்தில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 15 வயது சிறுமி உட்பட மூவருக்கு கொரோனா தொற்று

யாழ்ப்பாணத்தில் கொரோனா வைரஸ் தொற்றுக்கு இலக்கானவர்கள் 3 மூவர் அடையாளம் காணப்பட்டுள்ள நிலையில் இலங்கையில் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 159 ஆக அதிகரித்துள்ளது.இந்நிலையில் மேற்படி மூவரும் அரியாலை முள்ளி வீதியைச் வசிக்கும் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 36 வயதான தாயார், 20 வயதான மகன் மற்றும் 15 வயதுடைய மகள் ஆகியோரே தொற்றிற்கு இலக்காகியுள்ளனர் என யாழ். போதனா வைத்தியாலை பணிப்பாளர் த.சத்தியமூர்த்தி தெரிவித்துள்ளார்.

கொரோனா தொற்றிற்கு இலக்கான மூவரும், அரியாலையில் சுவிஸ் போதகர் ஆராதனை நடத்திய தேவாலயத்திற்கு அருகில் வசிப்பவர்கள் என்பதுடன் தேவாலயத்துடன் தொடர்புடையவர்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.தற்போது அவர்களுடைய உடல்நிலை சாதாரணமாகவே காணப்படுவதாகவும் இருப்பினும் மேலதிக பராமரிப்புக்கும், சிகிச்சைக்கும், கண்காணிப்புக்கும் இன்று வெலிகந்த விசேட வைத்தியசாலைக்கு அனுப்பிவைக்கப்படவுள்ளதாகவும் பணிப்பாளர் சத்தியமூர்த்தி குறிப்பிட்டுள்ளார்.(15)