செய்திகள்

யாழ்ப்பாணத்தில் ஆர்ப்பாட்டம் ஆரம்பம் (படங்கள் இணைப்பு)

இலங்கைப் போர்க் குற்றங்கள் குறித்த ஐ.நா. மனித உரிமைகள் பேரவையின் விசாரணை அறிக்கை ஒத்திவைக்கப்பட்டமைக்கு எதிர்ப்புத் தெரிவித்து யாழ்ப்பாணத்தில் பல்கலைக்கழக மாணவர்கள் ஏற்பாடு செய்துள்ள ஆர்ப்பாட்டப் பேரணி இன்று காலை 10.00 மணியளவில் ஆரம்பமாகியுள்ளது.

யாழ். பல்கலைக்கழக வளாகத்திலிருந்து ஆரம்பமாகியுள்ள இந்தப் பேரணியில் நூற்றுக்கணக்கான மாணவர்களும், பொதுமக்களும் கலந்துகொண்டிருக்கின்றார்கள். நல்லூர் சென்று அங்கிருந்து ஐ.நா. அலுவலகத்தில் மகஜர் கையளிப்பதுடன் பேரணி முடிவுக்கு வரும்.

மிகவும் அமைதியான முறையில் இடம்பெற்ற இந்தப் பேரணியில் மன்னார் மாவட்ட ஆயர் வண பிதா ராயப்பு ஜோசெப் உட்பட முக்கிய பிரமுகர்களும் பங்குகொண்டனர்.

12

11

10

9

8

7

6

5

4

3

2

02

1

0 (1)