செய்திகள்

யாழ்ப்பாணத்தில் இந்திய குடியரசுதின நிகழ்வு!

யாழ்ப்பாணத்திலுள்ள இந்திய துணைத்தூதரகத்தில், இந்தியாவின் 66ஆவது குடியரசுதின நிகழ்வுகள் இன்று திங்கட்கிழமை காலை 9 மணிக்கு நடைபெற்றன.
யாழ்ப்பாணம், நல்லூர் மருதடி வீதியில் அமைந்துள்ள இந்திய துணைத்தூதரகத்தில் இடம்பெற்ற இந்நிகழ்வில் இந்தியத் தேசியக் கொடியை இந்தியத் துணைத்தூதுவர் சி.நடராசா ஏற்றிவைத்ததுடன் தொடர்ந்து அவர் சிறப்புரை ஆற்றினார்.
இந்நிகழ்வில் நூற்றுக்கணக்கானோர் கலந்து கொண்டனர்.