செய்திகள்

ழ்ப்பாணத்தில் உயர்பாதுகாப்பு வலயங்களை அகற்றப்போவதில்லை

ஜனவரி 9 ம் திகதி அதிகாலை சதிப்புரட்சி முயற்சியில் ஈடுபட்டமைக்காக முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவை விசாரணைக்குட்படுத்த முடியாது அவ்வேளை அவருக்கு விடுபாட்டுரிமை காணப்பட்டது என சட்டமொழுங்கிற்கான அமைச்சர் ஜோன் அமரதுங்க தெரிவித்துள்ளார்.
எனினும் அவ்வேளை முன்னாள் பிரதமநீதியரசர் அங்கு பிரசன்னமாகயிருந்தமை குறித்து விசாரணை நடைபெறும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

நாட்டின் பாதுகாப்பு குறித்து உன்னிப்பாக அவதானித்து வருவதாகவும்,எவராவது பயங்கரவாதத்தை மீண்டும் ஆரம்பிக்க முனைகிறார்களா என புலனாய்வு பிரிவினரை பயன்படுத்தி ஆராய்ந்தவேளை அவ்வாறான அச்சுறுத்தல்கள் எதுவுமில்லை என தெரியவந்துள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார். யாழ்ப்பாணத்தில் உயர்பாதுகாப்பு வலயங்களை அகற்றப்போவதில்லை, அங்கு அதனை செய்வது குறித்து நாங்கள் எச்சரிக்கையாகயிருக்கவேண்டும். எங்களிடம் இது குறித்து வேண்டுகோள்கள் விடுக்கப்பட்டன,நான் இது குறித்து அறிக்கையொன்றை சமர்ப்பிக்குமாறு யாழ் பிரதிபொலிஸ் மா அதிபரை கோரியுள்ளேன்.

அதேவேளை கொழும்பில் உயர்பாதுகாப்பு வலயங்கள் அவசியமற்றவை,நாட்டின் பாதுகாப்பிற்கு ஆபத்து எதுவுமில்லை,உயாபாதுகாப்பு வலயங்களால் மக்கள் ஒரிடத்திலிருந்து வேறு இடத்திற்கு செல்லும்போது தேவையற்ற சிரமங்களை எதிர்நோக்கினர்,அது கொழும்பு நகரத்தின் மையத்தில் காணப்பட்டது.சனநெருக்கடி மிகுந்த பகுதியது. மேலதிக பாதுகாப்பிற்கு அவசியமில்லை என ஜனாதிபதியே தெரிவித்துள்ளார்.வீதிதடைகளை திறக்குமாறு அவர் கேட்டுள்ளார்.கண்டியிலும் இவற்றை திறந்துள்ளோம், என அவர் குறிப்பிட்டுள்ளார்.