செய்திகள்

யாழ்ப்பாணத்தில் ஐந்து பிரதேச செயலர்களுக்கும் ஒரு மேலதிக மாவட்ட செயலருக்கு இடமாற்றம் வழங்கப்படவுள்ளதாக தகவல்கள்

யாழ்ப்பாணத்தில் ஐந்து பிரதேச செயலர்களுக்கும் ஒரு மேலதிக மாவட்ட செயலருக்கு இடமாற்றம் வழங்கப்படவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.அடுத்த வருடம் ஜனவரி மாதமளவில் தேர்தல் அறிவிப்புக்கள் வெளிவரலாம் என எதிர்பார்க்கப்படுகிற நிலையில் ,யாழ்ப்பாணத்தில் மாவட்ட செயலர் மற்றும் பிரதேச செயலர்களுக்கு இடமாற்றம் வழங்கப்படவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.அதேவேளை இடமாற்றம் குறித்து பிரதேச செயலர்களுக்கு உத்தியோக பூர்வமாக அறிவிக்கப்படவில்லை என தெரிவிக்கப்படுகிறது.

மேலதிக யாழ். மாவட்ட செயலர் (காணி) எஸ். முரளிதரன், ஊர்காவற்துறை பிரதேச செயலர் மஞ்சுளாதேவி சதீசன் , நல்லூர் பிரதேச செயலர் அன்ரன் எழிலரசி , தெல்லிப்பளை பிரதேச செயலர் சண்முகராஜா சிவசிறி , சங்கானை பிரதேச செயலர் பொன்னம்பலம் பிறேமினி மற்றும் யாழ்ப்பாண பிரதேச செயலர் சாம்பசிவம் சுதர்சன் ஆகிய ஐவருக்குமே இடம்மாற்றம் வழங்கப்படவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.(15)