செய்திகள்

யாழ்ப்பாணத்தில் பொலிஸ் இடமாற்றம்: சந்தேகத்தைக் கிளப்புகிறார் மஹிந்த

யாழ்ப்பாணத்தில் கடந்த சில தினங்களில் இடம்பெற்ற பதற்றமான சூழ்நிலையை அடுத்து மேற்கொள்ளப்பட்ட யாழ்ப்பாண பொலிஸ் உயரதிகாரிகளின் இடமாற்றம் சந்தேகத்துக்குரியது என முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

திஸ்ஸமஹாராமவில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே முன்னாள் ஜனாதிபதி இது தொடர்பில் கருத்து தெரிவித்துள்ளார்.