செய்திகள்

யாழ்ப்பாணத்தில் மீன்பிடித் தொழிலை உறுதிப்படுத்த கோரி கையெழுத்து சேகரிக்கும் நடவடிக்கை

இழுவைமடி மீன்பிடித் தொழிலுக்கு எதிரான சட்டங்களை நடைமுறைப்படுத்தி நிலையான மீன்பிடித் தொழிலை உறுதிப்படுத்த கோரி யாழ்ப்பாணத்தில் கையெழுத்து சேகரிக்கும் நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டது.ஏற்கனவே மன்னார், கிளிநொச்சி மற்றும் முல்லைத்தீவு மாவட்டங்களில் கையெழுத்து சேகரிப்பு நடவடிக்கை இடம்பெற்ற நிலையில், இன்றையதினம் யாழ். நகர பகுதியில் குறித்த நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

மக்களிடம் பெற்றுக்கொள்ளப்படும் கையெழுத்துகளுடனான மகஜர் ஜனாதிபதி, சட்டமா அதிபர் மற்றும் கடற்றொழில் அமைச்சரிம் கையளிக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.யாழ்ப்பாண நகர பகுதியில் தேசிய மீனவ ஒத்துழைப்பு இயக்கம் மற்றும் வட மாகாண கடற்றொழிலாளர் இணையம் ஆகியவற்றின் ஏற்பாட்டில் இன்று சனிக்கிழமை கையெழுத்து சேகரிக்கும் நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டது.(15)