செய்திகள்

யாழ்ப்பாணத்தில் மேலும் இருவர் கொரோனா தொற்றினால் பாதிப்பு

யாழ்ப்பாணத்தில் மேலும் இருவர் கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்டுள்ளதாக யாழ்.போதனா வைத்தியாலையின் பணிப்பாளர் த.சத்தியமூர்த்தி தெரிவித்துள்ளார்.சுவிஸ் பாஸ்டருடன் தொடர்புபட்டதால் பலாலி தனிமைப்படுத்தல் மையத்தில் தனிமைப்படுத்தப்பட்டு இருக்கின்ற 20 பேரில் 10 பேருக்கு மேற்கொண்ட ஆய்வுக்கூட பரிசோதனையில் மேலும் இருவருக்கும் தொற்று உள்ளதாக உறுதிப்படுத்தப்பட்டு இருக்கின்றது.முன்னதாக நேற்று மாலை குறித்த மையத்தில் ஒருவருக்கு கொரோனா இருப்பது உறுதி செய்யப்பட்டிருந்தது. இதன்படி பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்ட 10 பேரில் மூவருக்கும் தொற்று உள்ளதாக உறுதிப்படுத்தப்பட்டு உள்ளது.

இவர்கள் அனைவரும் ஒரு கிழமைக்கு மேலாக அப்பகுதியில் தனிமைப்படுத்தப்பட்டு இருந்தவர்கள் என்பதுடன் இம்மூவரும் சுவிஸ் போதகரோடு நேரடியாகத் தொடர்பு கொண்டவர்கள்.ஆகவே கொரோனா தொற்று வியாதியானது எந்தவிதமான குணங்குறிகள் இன்றி சிலரிடையே காணப்படலாம் என்பதை உறுதிப்படுத்துகின்றது.எனவே, பொதுமக்கள் மிகவும் அவதானமாக சுகாதார அமைச்சினதும் அரசாங்கத்தினதும் அறிவுரைகளை ஏற்று நடந்துகொள்ள வேண்டுமென அவர் கேட்டுக்கொண்டுள்ளார்.இதேவேளை, யாழ்ப்பாணத்தில் கடந்த 22ஆம் திகதி கொரோனா வைரஸ் தொற்றால் யாழில் ஒருவர் அடையாளம் காணப்பட்டிருந்தார். அவருடன் சேர்த்து மொத்தமாக 4 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.(15)