செய்திகள்

யாழ்ப்பாணத்தில் மேலும் கொரோனா தொற்று உறுதியானது

யாழ்ப்பாணம் பலாலிப் பகுதியில் தனிமைப்படுத்தப்பட்டுள்ள 2 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக யாழ்.போதனா வைத்தியசாலைப் பணிப்பாளர் மருத்துவர் த.சத்தியமூர்த்தி தெரிவித்துள்ளார்.யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் சந்தேகத்தின் அடிப்படையில் சேர்க்கப்பட்ட 4 பேர் பலாலி தனிமை படுத்தப்பட்ட நிலையத்தில் உள்ள 3 பேர், யாழ்ப்பாணம் மாநகர சுகாதார வைத்திய அதிகாரி பிரிவைச் சேர்ந்த 7 பேர் நல்லூர் சுகாதார மருத்துவ அதிகாரி பிரிவைச் சேர்ந்த 2 மற்றும் முழங்காலில் தனிமைப்படுத்தப்பட்ட நிலையத்தில் உள்ள 2 பேருக்கு பரிசோதனைகள் முன்னெடுக்கப்பட்டன.இதில் பலாலிப் பகுதியில் தனிமைப்படுத்தப்பட்டு இருக்கும் 2 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.இது குறித்த தகவலை தனது முகப்புத்தகத்தில் பதிவிட்டுள்ளார்.(15)