செய்திகள்

யாழ்ப்பாணத்தில் “வேல்ட் விசனன்” நிறுவனத்தால் மக்களுக்கு உலருணவு

ஊரடங்கு சட்டம் காரணமாக பாதிக்கப்பட்டுள்ள குடும்பங்களுக்கான உலருணவுப் பொதிகள் நேற்று வேல்ட் விசன் நிறுவனத்தால் யாழ் அரச அதிபரிடம் வழங்கி வைக்கப்பட்டன.இதன்போது அரிசி, மா, கடலை, பருப்பு, எண்ணெய், மீன்டின் மற்றும் உப்பு உட்பட 1,790 ரூபா பெறுமதியான உலருணவு பொதிகளே கையளிக்கப்பட்டன.யாழ்ப்பாணம் மாவட்ட அரசாங்க அதிபரின் வழிகாட்டலின் சாவகச்சேரியை சேர்ந்த 1,300 குடும்பங்களுக்கும் சங்கானையை சேர்ந்த 850 குடும்பங்களுக்கும் இரு பிரிவுகளாக வழங்குவதற்கான உணவுப் பொதிகள் கையளிக்கப்பட்டன.(15)