யாழ்ப்பாணத்துக்கும், மகாபோதிக்கும் வருகின்றேன்: டுவிட்டரில் மோடி
இந்தவாரம் இலங்கைக்கு மேற்கொள்ளவுள்ள விஜயம் தொடர்பாக இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி நேற்றிரவு ருவிட்டரில் செய்தி ஒன்றை வெளியிட்டுள்ளார்.
“இந்தவாரம் நான் சீசெல்ஸ், மொறிசியஸ், சிறிலங்காவுக்குப் பயணம் செய்யவுள்ளேன். எனது பயணத்தின் மூலம் இந்த நட்புநாடுகளுடனான எமது உறவுகளை வலுப்படுத்திக் கொள்வதற்கு எதிர்பார்க்கிறேன்.
இந்தப் பயணம் இலங்கை – இந்திய உறவுகளை வலுப்படுத்தும் என்ற நம்பிக்கையுடனும் மகிழ்ச்சியுடனும், இலங்கைக்குச் செல்கிறேன். இலங்கை பாராளுமன்றத்திலும் உரையாற்றவுள்ளதுடன், நான் மகாபோதி சமூகத்துக்கும், யாழ்ப்பாணத்துக்கும் பயணம் செய்யவுள்ளேன்” என்று குறிப்பிட்டுள்ளார்.