செய்திகள்

யாழ்ப்பாணம் உட்பட 6 மாவட்டங்களின் ஊரடங்கு மறு அறிவித்தல் வரை தொடரும்

கொழும்பு, கம்பஹா, களுத்துறை, புத்தளம், கண்டி மற்றும் யாழ்ப்பாணம் மாவட்டங்களில் அமுலில் உள்ள ஊரடங்கு உத்தரவு மறு அறிவித்தல் வரை தொடரும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.ஜனாதிபதி ஊடகப்பிரிவு இதனை தெரிவித்துள்ளது.ஏனைய அனைத்து மாவட்டங்களிலும் நாளை திங்கட்கிழமை காலை 6.00 மணிக்கு தளர்த்தப்படும் ஊரடங்கு சட்டம் அன்றைய தினம் பிற்பகல் 2.00 மணிக்கு மீண்டும் அமுல்படுத்தப்படும்.அத்தியாவசிய சேவைகள் தவிர்ந்த ஏனைய பணிகளுக்காக மாவட்டங்களுக்கிடையிலான போக்குவரத்து முழுமையாக தடைசெய்யப்பட்டுள்ளது.

அத்தியாவசிய சேவைகளை வினைத்திறனாக பேணும் வகையில் நடைமுறையில் உள்ள முறைமைகளை துஷ்பிரயோகம் செய்பவர்களுக்கு எதிராக சட்டம் கடுமையாக நடைமுறைப்படுத்தப்படும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.அத்துடன் களுத்துறை மாவட்டத்தில் அடுளுகம மற்றும் கண்டி மாவட்டத்தில் அகுரணை கிராமங்கள் முழுமையாக தனிமைப்படுத்தப்பட்ட பிரதேசங்களாக குறிப்பிடப்பட்டள்ளன.(15)