செய்திகள்

யாழ். மத்திய கல்லூரி மாணவன் வியஸ்காந்த் ஐ.பி.எல் தொடருக்கான வீரர்களின் ஏலப் பட்டியலில்

நடப்பாண்டுக்கான ஐ.பி.எல் கிரிக்கெட் தொடரின் வீரர்களுக்கான ஏலம் எதிர்வரும் 18ஆம் திகதி சென்னையில் இடம்பெறவுள்ளது.

இந்த ஏல பட்டியலில் 292 வீரர்கள் இடம்பெற்றுள்ளனர். ஆரம்பத்தில் 1114 வீரர்கள் பதிவு செய்திருந்த நிலையில் தற்போது இறுதி பட்டியல் வெளியாகியுள்ளது.

இதில் 31 இலங்கை வீரர்களில் ஒன்பது பேரின் பெயர் ஏல பட்டியலில் உள்வாங்கப்பட்டுள்ளது. அதிலும் குறிப்பாக யாழ்ப்பாணம் மத்திய கல்லூரி மாணவர் விஜயகாந்த் வியஸ்காந்த் பெயரும் இடம்பெற்றுள்ளது.

31 இலங்கை வீரர்கள் பதிவு செய்த போதிலும் அவர்களில் 9 வீரர்களே இறுதிப்பட்டியலில் இடம்பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.

அவர்களின் விபரம் வருமாறு,

குசல் பெரேரா,திஸார பெரேரா, கெவின் கொத்திகொட,மகேஷ் தீக்சன,விஜயகாந்த் வியஷ்காந்த்,துஷ்மந்த சமீர,வனின்ந்து ஹசரங்க,டசுன் சானக மற்றும் இசுறு உதான. இந்நிலையில் இந்தியாவில் நடைபெறவுள்ள இந்த வருடத்துக்கான ஐ பி எல் போட்டியில் தெரிவு செய்யப்படவுள்ள இலங்கை வீரர்களின் பட்டியலில் யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த தமிழ் இளைஞம் உள்ளடக்கப்பட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.(15)