செய்திகள்

யாழ்ப்பாணம்- வட்டுக்கோட்டை பகுதியிலுள்ள வீடொன்றில் எரிவாயு அடுப்பு வெடித்து சிதறியது

யாழ்ப்பாணம்- வட்டுக்கோட்டை பகுதியிலுள்ள வீடொன்றில் எரிவாயு அடுப்பு வெடித்து சிதறிய சம்பவம் பதிவாகியுள்ளது.வட்டுக்கோட்டை- காளி கோவிலடியில் இன்று முற்பகல் இந்தச் சம்பவம் இடம்பெற்றுள்ளது.குறித்த சம்பவத்தில் கண்ணாடி பொருத்தப்பட்ட எரிவாயு அடுப்பே வெடித்துச் சிதறியுள்ளது. ஆனாலும் வேறு சேதங்கள் எவையும் இடம்பெறவில்லை என தெரிவிக்கப்படுகின்றது.

இதேவேளை மட்டக்களப்பு- திராய்மடு சுவிஸ் கிராமம் பகுதியில் இன்று புதன்கிழமை காலை, எரிவாயு அடுப்பு வெடித்துச் சிதறிய சம்பவொன்று பதிவாகியுள்ளது.திராய்மடு சுவிஸ் கிராமம் பகுதியிலுள்ள வீடொன்றில் இன்று காலை, தேநீர் தயாரிப்பதாற்காக எரிவாயு அடுப்பினை செயற்படுத்திய வேளையில் இந்த வெடிப்புச் சம்பவம் ஏற்பட்டதாக பாதிக்கப்பட்ட குடும்பத்தினர் குறிப்பிட்டுள்ளனர்.அதாவது எரிவாயு அடுப்பினை செயற்படுத்தி விட்டு, வெளியில் வந்து உறவினர்களிடம் கதைத்துக் கொண்டிருந்த வேளையில் வெடிப்புச் சம்பவமொன்று ஏற்பட்டதை உணர்ந்து அவ்விடத்திற்கு சென்று பார்த்தப்போது, எரிவாயு அடுப்பு வெடித்து சிதறி இருந்ததாக குடும்பத்தினர் தெரிவித்துள்ளனர்.(15)