செய்திகள்

யாழ்ப்பாணம் வந்தடைந்தார் பாதுகாப்பு அமைச்சின் செயலாளர்

கொரோனா வைரஸ் தொற்று காரணமாக யாழில் தொடர் ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ள நிலையில் யாழ்ப்பாண நிலவரங்கள் குறித்தும் அத்தோடு, யாழ்ப்பாணம் மாவட்டத்தில் விவசாயம், தொழில்முயற்சிகள் மற்றும் வியாபார நடவடிக்கைகளை ஆரம்பிப்பதில் உள்ள முன்னேற்றங்கள் உள்ளிட்ட விடயங்கள் தொடர்பில் ஆராய்வதற்காக பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் கமால் குணரட்ர இலங்கை விமானப்படை தளபதி எயார் மார்சல் சுமங்கல டயஸ் ஆகியோர் யாழ்ப்பாணத்தை வந்தடைந்தனர்.

பலாலி விமான படை தளத்தில் முப்படையினர் போலீசார் மத்தியில் பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் விசேட உரையாற்றவுள்ளார். விமானப்படை தளத்தில் இடம்பெறும் நிகழ்வில் முப்படையினர் மற்றும் பொலிசார் கலந்து கொண்டுள்ளனர்.குறித்த விஜயத்தின் பின்னர் கிளிநொச்சி மற்றும் வன்னி பிரதேசத்திற்கும் பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் விஜயத்தினை மேற்கொள்ளவுள்ளமை குறிப்பிடத்தக்கது.இந்நிலையில் பலாலி பாதுகாப்புத் தலைமையகத்தில் பாதுகாப்புச் செயலாளர் தலைமையில் ஆரம்பமான கூட்டத்தில் முப்படைகளின் கட்டளைத் தளபதிகள், வடமாகாண மூத்த பிரதிப் பொலிஸ் மா அதிபர், முப்படையினர், பொலிஸ் அதிகாரிகள் பங்கேற்றுள்ளனர்.(15)35F83545-4248-480C-8907-0B82DDF9F3FF-1024x768 D1874E35-F045-4211-9614-C2F61C3003B5-1024x768