செய்திகள்

யாழ்ப்பாணம் வருகிறார் பாதுகாப்பு அமைச்சின் செயலாளர்

கொரோனா தொற்று பரவலை கவனத்திற்கொண்டு இடர் வலயங்களாக அரசால் பிரகடனப்படுத்துள்ள 6 மாவட்டங்களின் ஒன்றான யாழ்ப்பாணம் மாவட்டத்தின் தற்போதைய நிலமைகள் தொடர்பில் ஆராய்வதற்காக ஜனாதிபதியின் பிரதிநிதியாக பாதுகாப்புச் செயலாளர் மேஜர் ஜெனரல் கமால் குணரட்ன, நாளை யாழ்ப்பாணத்துக்கு வருகை தரவுள்ளார்.

வடக்கில் இராணுவத்தினரால் மேற்கொள்ளப்பட்டுவரும் கொரோனா தடுப்பு வேலைத்திட்டங்கள் தொடர்பில் இப்பயணத்தின் போது அவர் ஆராயவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.விசேட விமானம் மூலம் யாழ்ப்பாணம் பலாலி விமான நிலையத்தை வந்தடையவுள்ள பாதுகாப்பு செயலாளர் யாழ்ப்பாணம் பலாலி பாதுகாப்பு படைகளின் தலைமையகத்தில் இராணுவ உயரதிகாரிகள் மற்றும் படை வீரர்களுடன் சந்திப்பினை மேற்கொள்ளவுள்ளார்.மேலும், யாழ்ப்பாணம் மாவட்டத்தில் விவசாயம், தொழில்முயற்சிகள் மற்றும் வியாபார நடவடிக்கைகளை ஆரம்பிப்பதில் உள்ள முன்னேற்றங்கள் உள்ளிட்ட விடயங்கள் தொடர்பில் பாதுகாப்புச் செயலாளர் ஆராய்வார் என்று தெரிவிக்கப்பட்டது.(15)