செய்திகள்

யாழ்.அளவெட்டியில் அனுமதியின்றி மாடு வெட்டி விற்றவர் கைது செய்யப்பட்டு மல்லாகம் நீதிமன்றத்தில் ஆஜர்

யாழ்.அளவெட்டிப் பிரதேசத்தில் அனுமதியின்றி மாடு வெட்டி விற்பனை செய்த நபரொருவர் தெல்லிப்பழைப் பொலிஸாரால் நேற்று முன்தினம் புதன்கிழமை (03.04.2015) கைது செய்யப்பட்டு மல்லாகம் நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தப்பட்ட நிலையில் குறித்த நபர் நீதவானால் பிணையில் விடுவிக்கப்பட்டதுடன் வழக்கை எதிர்வரும் 24 ஆம் திகதி வரை ஒத்தியும் வைத்தார்.

குறித்த நபர் பொதுச் சுகாதாரப் பரிசோதகரின் முத்திரை பொறிக்கப்படாமல் தனக்குச் சொந்தமான இறைச்சிக் கடையில் இறைச்சி விற்பனை செய்வதை அவதானித்த தெல்லிப்பழைச் சுகாதார வைத்திய அதிகாரியாலும், அளவெட்டிப் பொதுச் சுகாதாரப் பரிசோதகராலும் இது குறித்துப் பொலிஸாருக்கு அறிவிக்கப்பட்டதைத் தொடர்ந்து பொலிஸார் சந்தேக நபரைக் கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர். இறைச்சியும் மன்றில் பாரப்படுத்தப்பட்டது.

இந்த நிலையிலேயே நீதவான் மேற்படி உத்தரவைப் பிறப்பித்திருந்தார்.

யாழ். நகர் நிருபர்-