செய்திகள்

யாழ். ஆழியவளை மக்களுக்கு வாழ்வாதார உதவிகளை வழங்கி வைத்த தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி (படங்கள்)

யுத்தத்தினால் பாதிக்கப்பட்ட யாழ்ப்பாணம் வடமராட்சி கிழக்கு ஆழியவளை மக்களில் ஒரு தொகுதியினருக்கு முதற்கட்டமாக தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி – அகில இலங்கை தமிழ் காங்கிரஸ் இணைந்து வாழ்வாதார உதவிகளை வழங்கி வைத்துள்ளன.

30 குடும்பங்களுக்கு குறித்த உதவிகள் வழங்கும் நிகழ்வு நேற்று முன்தினம் புதன்கிழமை ஆழியவளை பொதுநோக்கு மண்டபத்தில் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் பிரதேச அமைப்பாளர் தங்கராசா காண்டீபன் தலைமையில் இடம்பெற்றது.

சுயதொழில் முயற்சியை ஊக்குவிக்கவும் பாதிக்கப்பட்ட மக்களின் வாழ்வில் மாற்றத்தையும் முன்னேற்றத்தையும் ஏற்படுத்தும் நோக்கில் சுயதொழிலுக்கான உதவிகள் வழங்கப்பட்டது.

மக்களது தேவை அடிப்படையில் நல்லின ஆடுகள், தையல் இயந்திரங்கள், வியாபார பொருட்கள், கோழி வளர்ப்பிற்கான உதவிகள், கடற்தொழில் உபகரணங்கள் என பல்வேறு உதவித்திட்டங்கள் வழங்கப்பட்டன.

மேற்படி நிகழ்வில் கட்சியின் தலைவர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம், பொதுச் செயலாளர் செல்வராசா கஜேந்திரன், திட்ட இணைப்பாளர் சத்தியசீலன் ஆகியோர் கலந்து கொண்டு உதவிகளை வழங்கி வைத்தனர்.

16390_925516647488659_3265019644906787663_n

1896802_925515654155425_5395928287662263333_n

10343480_925515590822098_7060823864335061142_n

10361461_925515087488815_2815985453840147587_n

10520816_925515497488774_2047784623015002960_n

10868013_925516677488656_8054121857657645633_n

11008049_925516197488704_2468527463145547189_n

11053256_925515610822096_4665517044540861709_n

11079641_925515630822094_2571881100696765798_n

11082602_925515587488765_3027110617638184088_n

11083848_925516207488703_2550128682969703372_n