செய்திகள்

யாழ். இளைஞர் கழக சம்மேளனங்களின் விளையாட்டு விழாவும், விளையாட்டு உபகரணங்கள் வழங்கும் நிகழ்வும் (படங்கள்)

யாழ்.மாவட்டத்தின் ஐந்து பிரதேச இளைஞர் கழக சம்மேளனங்களின் விளையாட்டு விழாவும்,விளையாட்டு உபகரணங்கள் வழங்கும் நிகழ்வும் அண்மையில் மானிப்பாய் இந்துக் கல்லூரி விளையாட்டு மைதானத்தில் இடம்பெற்றன.

இந் நிகழ்வில் வடமாகாண சபை உறுப்பினர் பாலச்சந்திரன் கஜதீபன் பிரதம விருந்தினராகக் கலந்து கொண்டார்.

இந் நிகழ்வில் உடுவில், தெல்லிப்பழை, காரைநகர், சண்டிலிப்பாய், சங்கானை ஆகிய பிரதேச செயலகப் பிரிவுகளைச் சேர்ந்த இளைஞர் கழக சம்மேளனங்களின் இளைஞர்கள், பிரதேச சபைத் தலைவர்கள், விளையாட்டு வீரர்கள், பாடசாலை அதிபர்கள், பொதுமக்கள் எனப் பலரும் கலந்து கொண்டனர்.

யாழ்.நகர் நிருபர்-

sports kaja (1)

sports kaja (2)

sports kaja (3)