செய்திகள்

யாழ் ஏழாலையில் கசிப்பு விற்றவருக்கு 25 ஆயிரம் ரூபா அபராதம்

யாழ்.ஏழாலை மயிலங்காட்டுப் பகுதியில் பற்றைக்குள் மறைத்துக் கசிப்பு விற்பனை செய்த அதே பகுதியைச் சேர்ந்த நபர் நேற்று முன்தினம் திங்கட்கிழமை மல்லாகம் நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தப்பட்ட போது நீதவான் கறுப்பையா ஜீவராணி 25 ஆயிரம் ரூபா அபராதம் விதித்துத் தீர்ப்பளித்துள்ளார்.

கடந்த 28 ஆம் திகதி பொலிஸாருக்குக் கிடைத்த இரகசியத் தகவலுக்கமைய சுன்னாகம் பொலிஸார் நடாத்திய தேடுதல் நடவடிக்கையில் 12 லீற்றர் கொள்ளளவு கொண்ட 5 பரல் கசிப்புக் கைப்பற்றப்பட்டுள்ளது. சந்தேகத்தின் பேரில் 54 வயதுடைய நபரொருவரும் கைது செய்யப்பட்டிருந்தார்.
இவ்வாறு கைது செய்யப்பட்ட சந்தேகநபர் மல்லாகம் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட போதே நீதவான் குறித்த அபராதத் தொகையைச் செலுத்துமாறு உத்தரவிட்டார். (யாழ்.நகர் நிருபர்)