செய்திகள்

யாழ்.ஏழாலை அத்தியடி விநாயகர் ஆலய இரதோற்சவம் (படங்கள்)

திருமூலரால் சிவபூமி எனப் போற்றப்பட்ட ஈழத்தின் வடபால் ஏழு ஆலயங்களைத் தன்னகத்தே கொண்டு விளங்கும் ஏழாலைக் கிராமத்தின் அத்தியடி விநாயகப் பெருமானின் வருடாந்த திருவிழாவின் இரதோற்சவம் அண்மையில் வெகு சிறப்பாக இடம்பெற்றது.

காலை 6.30 மணிக்கு விசேட அபிஷேக பூசைகள் இடம்பெற்று அதனைத் தொடர்ந்து காலை 9 மணிக்கு வசந்தமண்டபப் பூசையும் அதனைத் தொடர்ந்து வேழமுகத்து விநாயகப் பெருமான் அழகிய பட்டாடைகளால் அலங்கரிக்கப்பட்டுத் தேரிலே ஆரோகணித்தார்.

இணுவிலின் புகழ்பூத்த பஞ்சாபிகேசன் குழுவினரின் நாதஸ்வர, தவில் வாத்தியங்களை இசைத்தனர். ஆலயத்தின் இரதோற்சவக் கிரியைகள் ஊரெழுவைச் சேர்ந்த சிவாகமசாகரம் தி.சோமநாதக் குருக்கள் தலைமையில் நடைபெற்றன. யாழ்.நகர் நிருபர்-

IMG_4376 IMG_4382 IMG_4385 IMG_4388 IMG_4389 IMG_4390 IMG_4395 IMG_4397 IMG_4400 IMG_4409