செய்திகள்

யாழ்.ஏழாலை மகாவித்தியாலயத்தில் புதிய தொழில்நுட்ப ஆய்வு கூடம் திறந்து வைப்பு

யாழ்.ஏழாலை மகாவித்தியாலயத்தில் புதிதாக நிர்மாணிக்கப்பட்ட தொழில்நுட்ப ஆய்வு கூடத்தை அண்மையில் வடமாகாண சபை உறுப்பினர்களான அ.பரஞ்சோதி,பா.கஜதீபன்,இ.ஆர்னோல்ட் ஆகியோர் இணைந்து சம்பிராதயபூர்வமாக நாடா வெட்டித் திறந்து வைத்தனர்.இதனைத் தொடர்ந்து குறித்த ஆய்வு கூடம் மாணவர்களின் பாவனைக்கு உத்தியோகபூர்வமாகக் கையளிக்கப்பட்டது.

பாடசாலையின் அதிபர் தலைமையில் இடம்பெற்ற இந் நிகழ்வில் மேற்படி வடமாகாண சபை உறுப்பினர்கள் மற்றும் வலிகாமம் வலயப் பிரதிக் கல்விப் பணிப்பாளர் ரவிச்சந்திரன் ஆகியோர் விருந்தினர்களாகக் கலந்து கொண்டனர்.இந் நிகழ்வில் மாணவர்கள்,ஆசிரியர்கள்,பெற்றோர்கள்,பழைய மாணவர்கள் எனப் பலரும் கலந்து கொண்டனர்.
யாழ்.நகர் நிருபர்-

11225813_543003569171842_2127950166_n 11251438_543003622505170_914623856_n 11255156_543003629171836_729020517_n