செய்திகள்

யாழ்.கந்தரோடையில் நடந்த குருதிக்கொடை முகாம்

யாழ்.கந்தரோடை இளைஞர் கழகமும் விளையாட்டுக்கழகமும் இணைந்து நடாத்திய குருதிக்கொடை முகாம் நேற்று முன்தினம் புதன்கிழமை கந்தரோடை சனசமூக நிலைய மண்டபத்தில் இடம்பெற்றது.

கந்தரோடை இளைஞர் கழகத் தலைவர் எஸ்.விஜிதரன் தலைமையில் இடம்பெற்ற குறித்த குருதிக் கொhடை முகாமில் தெல்லிப்பழை ஆதார வைத்தியசாலையின் நடமாடும் இரத்தவங்கிப் பிரிவினர் நேரடியாகச் சென்று குருதி பெற்றுக் கொண்டனர்.இந்த இரத்ததான முகாம் மூன்றாவது வருடமாக இடம்பெறுவதாகவும் இன்றைய(நேற்று முன்தினம்) இடம்பெற்ற இரத்ததான முகாமில் 16 வரையான இளைஞர்கள் ஆர்வத்துடன் கலந்து கொண்டு குருதிக்கொடை வழங்கியதாகவும் எஸ்.விஜிதரன் தெரிவித்தார். யாழ்.நகர் நிருபர்-