செய்திகள்

யாழ்.கீரிமலை கூவில் சிவானந்தா விளையாட்டுக்கழக புதிய மைதானம் திறந்து வைப்பு.

கீரிமலை கூவில் சிவானந்தா விளையாட்டுக்கழகத்தின் புதிய மைதானம் கடந்த வெள்ளிக்கிழமை  அன்று வலிவடக்கு பிரதேசசபை துணைதவிசாளர் ச.சஜீவன் மற்றும் மாவிட்டபுரம் கந்தசுவாமி ஆதினகர்த்தா ஆகிய இருவரும் இணைந்து திறந்து வைத்தனர். அன்றைய தினம் சிநேகபூர்வ உதைப்பந்தாட்ட நிகழ்வும் நடைபெற்றது.

இப்பிரதேசத்திலிருந்து 1990ம் ஆண்டு இடம் பெயர்ந்த மக்கள் 2011ம் ஆண்டளவில் மீளக் குடியேறியிருந்தார்கள். அன்று தொடக்கம் இன்று வரை இவ்விளையாட்டுக்கழகத்தால் பயன்படுத்துவதற்கு மைதானம் இல்லாததால் இவ் இளைஞர்களின் விளையாட்டுத்திறமையைச் செயற்படுத்த முடியாமல் போனது.

தற்பொழுது மாவிட்டபுரம் கந்தசுவாமி ஆதீனகர்த்தா தனது சொந்தக் காணியை சிவானந்தா விளையாட்டுக்கழக இளைஞர்கள் மைதனமாகப் பயன்படுத்துவதற்கு வழங்கியுள்ளார். பெரும் காடுகளாக இருந்த இவ் மைதானத்தை பிரதேசசபை துணைதவிசாளர் தனது சொந்த நிதியில் புனரமைத்து வழங்கியுள்ளார். தற்பொழுது இவ் மைதானத்தில் பல விளையாட்டு நிகழ்வுகள் நடைபெற்று வருகின்றது. இவ் மைதானத்தை புனரமைத்து தந்தமைக்காகக் கிராமமக்கள் பிரதேசசபை துணைதவிசாளருக்கும், மாவிட்டபுரம் கந்தசுவாமி ஆலய ஆதினகர்த்தாவுக்கும் தங்களது நன்றிகளைத் தெரிவித்துள்ளார்கள்.

IMG_2401 IMG_2412 (1) IMG_2429 IMG_2430