செய்திகள்

யாழ். குடாநாட்டின் சில இடங்களில் இன்றும் நாளையும் மின்தடை

மின் விநியோக மார்க்கங்களின் கட்டமைப்பு மற்றும் பராமரிப்பு வேலைகளுக்காக நாளை புதன்கிழமை (13.05.2015) யாழ்.குடாநாட்டின் சிலவிடங்களில் காலை 08.30 மணி தொடக்கம் மாலை 05.30 மணி வரை மின்சாரம் தடைப்பட்டிருக்கும்.

இதன்படி மாதகல், மாதகல் ஜெற்றி, ஜம்புகோளப் பட்டினம், கட்டுப்புலம் ஆகிய இடங்களில் மின்சாரம் தடைப்பட்டிருக்குமென இலங்கை மின்சார சபை அறிவித்துள்ளது.

இதேவேளை இன்று செவ்வாய்க்கிழமை யாழ்.குடாநாட்டின் சிலவிடங்களிலும் வன்னிப் பிரதேசத்தின் சிலவிடங்களிலும் மின்சாரம் தடைப்பட்டிருக்குமென அந்த நிலையம் மேலும் அறிவித்துள்ளது.

யாழ்.நகர் நிருபர்-