செய்திகள்

யாழ்.குடாநாட்டின் பல இடங்களிலும் நாளை மின்தடை

யாழ்.குடாநாட்டின் பலவிடங்களில் நாளை ஞாயிற்றுக்கிழமை(07.6.2015)காலை 08.30 மணி தொடக்கம் மாலை 05.30 மெணி வரை மின்விநியோகம் தடைப்பட்டிருக்கும்.மின் விநியோக மார்க்கங்களின் கட்டமைப்பு மற்றும் பராமரிப்பு வேலைகள் காரணமாகவே மின்விநியோகம் தடைப்பட்டிருக்குமென இலங்கை மின்சார சபை அறிவித்துள்ளது.

சுன்னாகம்,கொத்தியாவத்தை,மயிலணி,ஐயனார் கோவிலடி, வரியப்புலம், கல்லாரை, மல்லாகம், ஏழாலை, அலுக்கை, சுன்னாகம் கார்கில்ஸ் பி.எல்.சி,சுன்னாகம் மக்கள் வங்கி,மல்லாகம் நீதிமன்றக் கட்டடத் தொகுதி,தெல்லிப்பழை மாவட்ட வைத்தியசாலை,தெல்லிப்பழைப் புற்று நோய் வைத்தியசாலை,அளவெட்டி,கேணிக்கரை,அம்பனை,பன்னாலை,சிறுவிளான்,தெல்லிப்பழை,மாவிட்டபுரம்,கொல்லங்கலட்டி,கீரிமலை,நகுலேஸ்வரம்,அல்லைப்பிட்டி,மண்கும்பான் தேசிய நீர் வழங்கல் வடிகால் சபை,மண்கும்பான்,சாட்டி வீதி,மண்கும்பான் கடற்படை முகாம்,சோலாவத்தை,வங்காளவடி,செட்டியப்புலம்,துறையூர் கடற்படை முகாம்,மயிலப்புலம்,மடத்துவெளி,ஆலடிச் சந்தி,புங்குடுதீவு,வல்லான்,கேரதீவு,இறுப்பிட்டி,குறிகட்டுவான்,புங்குடுதீவு இலங்கைக் கடற்படை முகாம்,மண்டைதீவுக் கடற்படை முகாம் ஆகிய இமடங்களில் மின்சாரம் தடைப்பட்டிருக்கும்.

இதேவேளை,நாளை வன்னிமாவட்டத்தின் சில பிரதேசங்களிலும் மின்சாரம் தடைப்பட்டிருக்குமெனவும் அறிவிக்கப்பட்டுள்ளது. யாழ்.நகர் நிருபர்-